18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பாக மத்திய அரசானது பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனிடையில் 2தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.
இதற்கு முன்பாக 60 வயதிற்கு அதிகமான இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. இதில் வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் உதவும் எனவும் மத்திய அரசு கருதுகிறது. இப்போது 12 -14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.