இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லம் தோறும் இன்று முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதை அடுத்து தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது .
பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த தேசிய கொடிகளை வாங்கி வருகின்றனர். இதனால் தேசியக்கொடி விற்பனை மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகியுள்ளதாக கலாச்சாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.