பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும பயணிகளுக்கு இந்தியா முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் அனைவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 22ம் தேதி நள்ளிரவிலிருந்து இந்த நெறிமுறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தங்கள் சுய விவரங்களை புறப்படுவதற்கு முன் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்யப்பட்டு தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு அவர்கள் இந்தியா வந்ததும் 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.
பிரிட்டனிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு மட்டுமின்றி அரபு நாடுகள் வழியாக விமானம் மாறி பயணிக்கும் பிரேசில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 14 நாட்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்று உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விமானம் மாறி வந்தவர்களுக்கு அங்கே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்பதால் இரண்டு விமான பயணங்களுக்கும் இடையில் 6 மணி முதல் 8 மணி நேரம் இடைவெளி இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தால் அடுத்த விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். பிறகு அவர் இந்தியா வந்ததும் தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு விமான நிலையத்திலே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது இந்தியா வந்ததும் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தாலோ அவர்கள் அதிகாரிகளால் கொரோனா நோயாளிகளுக்கான முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள். தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் மாற்றமடைந்த புதிய கொரோனா வகை தொற்று சமீபத்தில் இந்தியா திரும்பிய 5 பயணிகளுக்கு கண்டறியப்பட்து குறிப்பிடத்தக்கது.