Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் 60 வயதிற்குட்பட்டவர்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஜெர்மனியில்  60 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அந்நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பல பேருக்கு ரத்தம் உறைதல் மற்றும் பக்கவிளைவு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனால் அந்த தடுப்பூசியை பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருந்தது. அதனை அடுத்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்பு குழு ஆகியவை நடத்திய சோதனை ஆய்வுகளின் இறுதியில் அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்தது .

அதனால் ஜெர்மனி நாட்டில் அந்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களில்  60 வயதிற்கும் கீழ் உள்ள பல பேருக்கு ரத்த உறைதல் மற்றும் பக்க விளைவு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்நாட்டு அரசு தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் .ஆனால் தடுப்பூசி போடும் போது மருத்துவர்களை  கலந்தாலோசித்து பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |