Categories
தேசிய செய்திகள்

நாடே எதிர்பார்ப்பில்…. 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?…. இன்னும் சற்று நேரத்தில்….!!!!

உத்திரப் பிரதேசம், கோவா, உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள், வாகன பிரசாரங்களுக்கு இந்த முறை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு பல கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல்கள் ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதனால் அரசியல் வட்டாரமே பெரும் பதற்றத்தில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்று இன்று மாலைக்குள் உறுதி செய்யப்படும்.

Categories

Tech |