Categories
தேசிய செய்திகள்

நாடே பெரும் அதிர்ச்சி…! இளைஞரை பலாத்காரம் செய்த 2 பேர்…. புதருக்குள் வெறிச்செயல்…!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவரும் ஆவேஷ் மிர்சா மற்றும் அனில் உய்கே ஆகிய இளைஞர்களும் ஆன்லைன் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி உள்ளனர். இந்நிலையில் மூவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். நந்தன்வன் பகுதியில் உள்ள மகப்பேறு வார்டுக்கு அருகில் 19 வயது இளைஞரை வரச்சொல்லி அழைத்துள்ளனர்.

இவர்களின் பேச்சை நம்பி அந்த இளைஞரும் சென்றுள்ளார். அங்கு வந்த பிறகு, ஆவேஷ் மிர்சா, அனில் உய்கே ஆகிய இருவரும் அந்த இளைஞரை அருகே இருந்த முட்புதருக்குள் இழுத்து சென்று இயற்கைக்கு மாறாக கொடுரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் நந்தன்வன் காவல் நிலையத்தில் இருவர் மீதும்புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இளைஞர் அளித்த மருத்துவ அறிக்கையின் படி குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மீதும் குற்றவியல் சட்டம் 377 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு இளைஞரை இரண்டு இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |