நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் டோல்கேட் முந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரின் மனைவி சங்கீதா. சென்ற 30-ம் தேதி காலை சங்கீதாவும் இவரின் மகள் ஷர்மிளாவும் புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த சங்கீதாவின் கழுத்தில் இருந்த பத்து பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளான்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று போலீசார் நாட்டறம்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை விசாரணை மேற்கொண்டார்கள். அதில் அவர் வாணியம்பாடி பகுதியில் சேர்ந்த அமர் உல்லா என்பதும் சங்கீதாவிடம் இருந்து நகையை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 7 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்கள்.