Categories
மாநில செய்திகள் வானிலை

நாட்டின் ஒரு பக்கம் கனமழை… மறுபக்கம் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலம், நாகலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். மேலும் நாகலாந்து மணிப்பூர் பகுதிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும் மேற்கு வங்கத்தின் ஒருசில பகுதிகளிலும் சிக்கிமிலும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோல இமாச்சல பிரதேசம்,  ஹரியானா, டில்லி, தென்மேற்கு, உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீச கூடும் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Categories

Tech |