தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வீரா்களுக்கான வீடு ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடா்புக்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) “பிரஹாரி” கைப்பேசி செயலியை மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது ” சா்வதேச எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் கடினமான நில அமைப்பு காரணமாக வேலிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
அவ்வாறு வேலிகள் அமைக்க இயலாத பகுதிகளில் பிஎஸ்எஃப் சாா்பாக உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வீரா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து உள்ளனா். நாட்டின் எல்லைகளை தூண்களாலும் வேலிகளாலும் பாதுகாக்க முடியாது. எல்லைகளில் நிற்கும் வீரா்களால் தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” என்று அவர் கூறினாா்.