Categories
உலக செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனிப்போம்”…. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டம்…!!!

சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனின் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கவனிப்போம்.

அதனை தொடர்ந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் அந்த துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. அங்கு தான் இலங்கை உளவு கப்பல் நிலைநிறுத்தப்படுகிறது. மேலும் சீனாவில் ஜங்க் துறைமுகத்தில் இருந்து கடந்த மாத 13ஆம் தேதி புறப்பட்ட ‘யுவான் வாங்க் 5’ கப்பல் தைவானை கடந்து இந்திய பெருங்கடலில் இலங்கை நோக்கி பயணம் செய்து வருகிறது.

Categories

Tech |