சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி நாட்டில் உள்ள 16 முக்கிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு மொத்தம் 810 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது.
இதனையடுத்து ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் 50 கிலோ வாட் சார்ஜரும், 100 கிலோமீட்டர் தொலைவுக்கு 100 கிலோ வாட் சார்ஜரும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த சார்ஜிங் நிலையங்கள் அடுத்து வரும் 6 அல்லது 8 மாதங்களுக்குள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.