ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது 1961ம் வருடம் பிரிட்டிஷ் கடற்படையினரிடமிருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயராகும். இந்த கப்பல் 1971 ஆம் வருடம் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் பெரும் பங்கு வகிக்கிறது. 1997 ஆம் வருடம் இந்த கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில் அந்த கப்பலை நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலுக்கு ஐ என் எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும் ஏற்கனவே இந்தியாவிடம் உள்ள விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆதித்யா ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டதாகும். இந்த நிலையில் தற்போது உலகில் ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறனை கொண்டிருக்கிறது அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்து இருக்கின்றது.
இந்திய கடற்படையால் வடிவமைக்கப்பட்டு கொச்சி கப்பல் கட்டும் தளம் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் இந்தியாவின் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட சுமார் ஏழு மடங்கு பெரியதாகும். இந்த கப்பல்கள் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இதன் எடை சுமார் 43 ஆயிரம் டன் மேலும் 14 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,300 அறைகள் இருக்கிறது இதில் 1700 பேர் தங்க முடியும். அதிலும் பெண் அதிகாரிகளுக்கு என்று தனி அறைகளும் இருக்கின்றன. இந்த கப்பலை தயாரிப்பதற்கு 23 ஆயிரம் டன்னுக்கு 2500 கிலோமீட்டர் மின்சார கேபிள்கள் 150 கிலோமீட்டர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கப்பலில் உள்ள நான்கு எஞ்சின்களும் சேர்த்து 88 மெகாவாட் சக்தியை உருவாக்குகிறது. அது ஒரு பெரிய நகரத்திற்கே மின்சாரம் வழங்க போதுமானதாகும். இந்த விக்ராந்த கப்பல் மிகப்பெரிய மருத்துவ வசதிகளையும் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த விமானம் தாங்கி கப்பலில் இரண்டு ஓடுதளங்கள் இருக்கிறது கப்பலில் இருந்து mig-29கே போர் விமானங்கள், kamov31 ஹெலிகாப்டர்கள், எம் ஹெச் 60 ஹெலிகாப்டர்கள், என முப்பது விமானங்களை இயக்கவும் தரையிறக்கமும் முடியும் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இந்த போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 நாட்களுக்கு நடைபெற்றுள்ளது. அதன் பின் அக்டோபர் ஜனவரி ஜூலை மாதம் என மொத்தம் நான்கு சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடி ஐ என் எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணித்து விட்டாலும் அடுத்த வருடம் இறுதியில் தான் இது முழுமையாக இயக்கத்திற்கு வரும். இந்த நிலையில் 2015 ஆம் வருடம் முதல் நாட்டிற்காக மூன்றாவது விமானம் தாங்கிக்க கப்பலை உருவாக்க கடற்படை அனுமதி கூறி வருகின்றது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு விமானம் தாங்கிக்கப்பலாக IACE-2 உருவாகும் இந்த கப்பலுக்கு ஐ என் எஸ் விஷால் என பெயரிடப்பட இருக்கின்றது. மேலும் உள்நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிப்பதற்கான சாத்தியத்தை நிஜமாக்கியதன் மூலமாக ஐ என் எஸ் விக்ரம் இந்திய கடற்படையில் எழுச்சியை ஏற்படுத்திருக்கிறது என கூறினால் அது மிகையாகாது.