நாடு முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவி வந்தது. இவற்றைக் கொண்டுவருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக தற்போது பல மாநிலங்களிலும் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதுதவிர சுமார் ஒரு லட்சம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளது. அரசு பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் இது சாத்தியமானதாக அம்மாநில துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இது போன்று பல மாநிலங்களும் தங்கள் மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். விரைவில் நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்.