Categories
பல்சுவை

நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த…. சர்வதேச இளைஞர்கள் தினம்…!!

நாட்டின் எதிர்காலமாக திகழம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் முக்கிய நோக்கத்திற்காக உறுதி ஏற்க வேண்டும்.

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1999 இல் ஐநா சபையால் தொடங்கப்பட்டது. ஐநா 15 முதல் 24 வயது வரை இருப்பவர்களை இளைஞர்கள் என வரையறுத்துள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு இளைஞர்கள். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஒவ்வொரு அரசும் இளைஞர்களுக்கு சரியான கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. தொழில்நுட்பம், வியாபாரம், ராணுவம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இளைஞர்களில் சிலர் ஆல்கஹால், போதைப்பொருள் மற்றும் புகையிலை போன்றவற்றை உபயோகிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர். சமீப காலமாக இந்த பழக்கத்தில் பள்ளி மாணவர்களும் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்போது பழக்கத்தை நீங்கள் மட்டுமல்ல உங்கள் பாசமிகு குடும்பம், இந்த சமூகமும் பாதிப்படைகிறது. எனவே இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கும் வீட்டின் முன்னேற்றத்திற்கும் உதவ இந்த நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும்.

Categories

Tech |