சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி விமான நிலையத்தில் டிஜி யாத்ரா (Digi Yatra) சேவையை துவங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, இப்போது டெல்லி, வாரணாசி மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவையானது துவங்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம்(2023) மார்ச் மாதத்துக்குள் ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா துவங்கப்படும். அதனை தொடர்ந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் டிஜி யாத்ரா சேவையானது தொடங்கப்படும்.
இப்போது ஏர்இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் டிஜி யாத்ரா சேவையில் இணைந்துள்ளது. இது விமானம் நிலையத்தின் நுழைவு வாயிலிலுள்ள நேரவிரயத்தை 4ல் ஒரு பங்காக குறைக்கும். இவற்றில் பயணிகள் இடும் தகவல்கள் பாதுகாக்கப்படும். அத்துடன் 24 மணிநேரத்தில் ஒருவரது தனிப்பட்ட தரவுகள் தானாகவே அழிக்கப்பட்டு விடும்” என்று கூறினார்.