Categories
உலக செய்திகள்

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரி…. பல தாக்குதல்கள் நடக்கும்…. அமைச்சரின் கருத்தால் பதட்டம் …!!!

நாட்டில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் நைஸில்லில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் நுழைந்த நபர் ஒருவர், அங்கு ஒரு பெண்ணின் தலையை வெட்டி துண்டித்து கொன்றுவிட்டு மேலும் இரண்டு பேரையும் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்துறை அமைச்சரரான ஜெரால்ட் டர்மனின், “நாம் நாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள எதிரிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளோம்.

இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுபோல மேலும் பல தீவிரவாத தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் வெளியிடப்பட்ட துருக்கி ஜனாதிபதியான எர்டோகனின் கருத்துக்கள் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. முகமது நபியின் கார்ட்டூன்கள் எனக்கு பிடிக்காது. இருப்பினும் அந்த கார்ட்டூன்களை வெளியிடும் உரிமையை நான் ஆதரிக்கிறேன்” என்று டர்மனின் கூறியுள்ளார்.

Categories

Tech |