2019 -20 ஆம் நிதியாண்டுக்கான பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த விபரத்தை ஏடிஆர் எனப்படும் சமூக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.
7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த முழு விபரத்தை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் தேசிய கட்சிகளைப் பொருத்தவரை பாஜக ரூபாய் 4747.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூபாய் 588.16 கோடியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் 44 பிராந்திய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடியாக உள்ளது.
இதில் முதல் 10 இடங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.2028.715 கோடி ஆகும். பிராந்தியக் கட்சிக கட்சிகளைப் பொருத்தவரை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ரூ.563.47 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளது. சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ.301.47 ஆகும்.அ.தி.மு.க. ரூ.267.61 கோடியுடன் 3-ம் இடத்திலும் உள்ளது.