உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். மாநிலத்தின் பாதுகாப்பில் பாஜக எவ்வித சமரசமும் செய்யாது. உத்தரகாண்ட் மாநிலமும் அது போல மாற வேண்டும். கிரிமினல்கள் மற்றும் ரவுடிகள் இங்கு ஒடுக்கப்பட வேண்டும்.
இந்துக்களை அவமதிப்பு செய்வதையே காங்கிரஸ் கட்சியினர் குறிக்கோளாக கொண்டுள்ளனர். இந்துக்கள் அல்லாதவர்கள் கூட தற்போது இந்துக்களை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். நான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்கிறேன் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இந்து பயங்கரவாத சொல் அல்ல அது ஒரு கலாச்சாரம். இந்தியாவின் கலாச்சாரம் என்னவோ அதனை எதிர்ப்பதில் காங்கிரஸ் குறிக்கோளாக உள்ளது. அதனால்தான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதை தொடர்ந்து எதிர்த்தனர்.!” என அவர் கூறினார்.