Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக…. மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை…. கேரள பல்கலை., அதிரடி….!!!!!

மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 60 நாட்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிடி அரவிந்த் குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பின்படி மகப்பேறு விடுமுறையை பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்திற்கு பின்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் முதல் அல்லது இரண்டாவது கர்ப்பத்திற்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்றும் ஒரு மாணவிக்கு ஒரு முறை மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |