இத்தாலி நாட்டில் உள்ள Naples நகரில் Cardarelli எனும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியான Rosario Lamonica என்பவர் மருத்துவமனையில் நோயாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வீடியோவாக காண்பித்துள்ளார். அந்த வீடியோவில், “இது Cardarelli மருத்துவமனை. இங்கு இந்த மனிதன் இறந்து கிடக்கிறார். மேலும் இங்கே ஒரு பெண் மலம் மற்றும் சிறுநீரகம் வெளியேறிய நிலையில் இறந்து கிடக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பதை கூட யாரும் பார்க்கவில்லை. அதனை அடுத்து கழிவறைக்கு சென்ற ஒரு நபர் அங்கேயே இறந்து கிடக்கிறார்.
நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை பதிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். கழிப்பறையில் அந்த நபர் இறந்து கிடந்த போது மருத்துவமனை ஊழியர்களிடம் சென்று அவரை வந்து மீட்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் உன் வேலையை பார்த்து விட்டு போ என்று அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் luigi Di Maio கூறுகையில், கழிவறையில் இறந்து கிடந்த நோயாளியை காட்டும் இந்த வீடியோ அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் ஒவ்வொரு குடிமகனும் உடல் நலன் மற்றும் உயிர் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் தென்பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
நேற்று ஒரு நாளில் மட்டும் 66 பேர் பலியாகி இருக்கிறார்கள். 37 ஆயிரத்து 978 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகமாக பலியானவர்களின் நாடுகளின் எண்ணிக்கையில் இத்தாலி ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.