நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை எப்போதும் இந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது கிடையாது. பணவீக்கமும் இதுபோன்று இருந்தது இல்லை. நம் நாட்டு மக்களின் நம்பிக்கை தினமும் சிதைந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி சமூக நீதி நசுக்கப்படுகிறது.
வங்கிகள் அனைத்தும் பிரச்சனையில் சிக்கி உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் உள்ளது. வளர்ச்சியா? வீழ்ச்சியா?: என்ன நடக்கிறது என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.