Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒரு போது மின் தட்டுப்பாடு இருக்காது…. உறுதி அளித்த அமைச்சர்….!!!!

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங் நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பதனால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என டெல்லியில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையினைப்பற்றி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமைச்சர் ஆர்கே. சிங் பேட்டி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய மின்சாரதுறை அமைச்சர் ஆர்கே சிங் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், தினந்தோறும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது . 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.அதனை தொடர்ந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்புவதாக கெயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுவரை நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவில்லை. இனிமேலும் இருக்காது என்று  நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோதியுடன்  இதை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |