Categories
அரசியல்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக கூறி தனது பிறந்தநாளை ரத்து செய்த சோனியாகாந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ,நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் அவர் வாழ பிராத்திப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் .சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், நாட்டில் மதச்சார்பின்மையையும் , கூட்டாட்சி தத்துவத்தையும் காப்பதில் அவரது தலைமையிலான காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்றி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

 

சோனியாவின் பொதுவாழ்வு பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறோம் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக கூறி இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை சோனியாகாந்தி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |