Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை இல்லை…. மத்திய அரசு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் இதில் 4g சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்தது.

அதில் இந்தியாவில் இதுவரை 93 சதவீதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45 ஆயிரம் கிராமங்களுக்கு இதுவரை 4g சேவை வழங்கப்படவில்லை என்றும் அதிகபட்சமாக ஒடிசாவில் 7592 கிராமங்களில் 4g சேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |