Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 80 சதவீதம் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு…. பிரதமர் மோடி….!!!!

தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என்று கூறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ரூ.4,000 கோடி செலவில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கும்.

இதனைத் தொடர்ந்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சென்னை பெரும்பாக்கத்தில் 70,000 சதுர அடியில் ரூ.24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தற்போது 500 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அதில் 22 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது. ஏறக்குறைய 8000 மக்கள் மருத்துவ மையங்கள் நாட்டில் உள்ளது. மேலும் நாட்டில் மருத்துவ இடங்கள் 80% அதிகரித்துள்ளது.

Categories

Tech |