Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாட்டுக்கோழிகளை வளர்ப்பது எப்படி தெரியுமா?…. நடைபெற்ற மேலாண்மை பயிற்சி…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!!!!

கோழிகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வைத்து நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து பயிற்சி முகாம்  நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன், கால்நடை மருத்துவர் மகேந்திரன், வேளாண் அறிவியல் நிலை பேராசிரியர் ஜெகதீசன், பெரியார்ராமசாமி, கமல சுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 37  விவசாயிகளுக்கு கோழி பராமரிப்பு, சிக்கனமான தீவன முறைகள், மீன் ஊறுகாய் தீவனம், அசோலா உற்பத்தி போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி முகாமில் கோழிகளுக்கான பாரம்பரிய வைத்திய முறைகள், அதற்கு பயன்படுத்தக்கூடிய இலைகள்  கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |