தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 500 பேருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும் பதிவினைப் புதுப்பித்தவராகவும் 18-60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.