பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் கொரோனா தொற்றின் போது வியாபாரம் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். மழையின் காரணமாக அவரது வீடும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
அவரது வீட்டிற்கு விருது வழங்குவதற்காக சென்றவர்கள் வீட்டின் நிலையை பார்த்து கலெக்டரிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கீட்டை செய்தார். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடுதல் நிதியை அளித்தார்கள். இந்த நிலையில் இளங்கோ நகரில் அவருக்கு புதிய வீடொன்று கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வீட்டின் திறப்பு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்கள். இதனால் மாரி செல்வராஜ் மிகவும் மகிழ்ச்சியோடு கூறியுள்ளதாவது, புதிய வீடு கட்டித் தந்தவர்களுக்கு நன்றி. மேலும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு நன்றியை தெரிவித்தார்.