Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி பாய்ந்து பெண் காயம்”… பெரும் பரபரப்பு…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!

விருதாச்சலம் அருகே நாட்டுத்துப்பாக்கி பாய்ந்து பெண் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சாந்தகுமாரி வீட்டின் வெளியே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது கணவரும் குழந்தைகளும் இருந்தனர்.

அப்போது அங்கு திடீரென பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு காசிப்பிள்ளை வெளியே ஓடி வந்து பார்த்தபோது சாந்தகுமாரின் மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்து கிடந்துள்ளார். உடனே அவரை எழுப்பி பார்த்தபோது அவருடைய இடுப்பு பகுதியில் நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் காசிப்பிள்ளை  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சாந்தகுமாரியை  மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள மான், முயல், மயில், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் தினமும் இரவு நேரத்தில் அங்கு வந்து செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு வேட்டையாட வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் விலங்குகளை சுட்டபோது சாந்தகுமாரி மீது குண்டு பாய்ந்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபற்றி புகாரின் பெயரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |