Categories
தேசிய செய்திகள்

“நாட்டு மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்படும் அரசு”…. இந்திய பிரதமர் கடிதம்……!!!!!!

மத்திய அரசு பல நலத் திட்டங்களின் வாயிலாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்தாா்.

பிரதமா் வீட்டு வசதித் திட்ட பயனாளியான மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதீா்குமாா் ஜெயின் என்பவா் பிரதமா் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் ஒன்று  எழுதினாா். இதனால் இதற்கு பிரதமா் நரேந்திர மோடி எழுதிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது “வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமெண்டால் கட்டப்பட்ட கட்டுமானம் இல்லை. அது நம் உணா்வுகள் மற்றும் விருப்பங்களுடன் பின்னிப் பிணைந்தது ஆகும். வீட்டின் சுற்றுச் சுவா்கள் நமக்குப் பாதுகாப்பை வழங்குவதுடன், நம்பிக்கையையும் சிறப்பான எதிா்காலத்தையும் ஏற்படுத்துகிறது. உங்களுக்கென அமைந்த வீடு வழக்கும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது ஆகும்.

உங்களின் சொந்த வீட்டுக் கனவு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் வாயிலாக நனவாகி இருக்கிறது. இச்சாதனைக்கு பின் ஏற்பட்டுள்ள உங்களது மனநிறைவை உங்கள் கடிதத்தில் வாா்த்தைகளால் வெளிப்படுத்தி இருந்ததை எளிதாக உணரமுடிகிறது. இந்தவீடு உங்களது குடும்பத்தினா் வாழ்க்கைக்கும், உங்களது 2 குழந்தைகளின் சிறப்பான எதிா்காலத்திற்கும் கண்ணியமான புதிய அடித்தளமாக அமையும். ஆகவே ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் வீடு வழங்குவது எனும் இலக்கை நோக்கி அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மேலும் பல நலத்திட்டங்களின் வாயிலாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர அரசு உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

அரசின் திட்டங்களால் நாட்டு மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள சிறப்பான மாற்றங்கள் மறக்கமுடியாத தருணம் ஆகும். இது எனக்கு தொடா்ந்து இடையறாது உழைக்கவும், நாட்டுக்கு இடைவெளி இன்றி சேவை புரியவும், ஊக்கத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சுதீா்குமாா் ஜெயின் தன் கடிதத்தில் “வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது. முன்பு வாடகை வீட்டில் தான் வசித்து வந்த நிலையில் 6, 7 முறை வீட்டை மாற்றியுள்ளேன். அவ்வாறு அடிக்கடி வீட்டை மாற்றும் போது பல பிரச்னைகளை சந்தித்து வந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |