கடந்த ஆறு மாதங்களாக உலகிற்கே சிம்ம சொப்பனமாக இருந்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளில் மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் உலக அரங்கின் போட்டியில் இந்தியாவும் முன்னணி வரிசையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு செய்தியாக தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடிக்க ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. இதன் முடிவு வருவதற்கு சில மணி நேரங்கள் தேவைப்படுவதால், மேலும் சிலருக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் 30 வினாடிகளில் கொரோனவை கண்டறியும் அதிவிரைவு கருவியை இந்தியா – இஸ்ரேல் இணைந்து கூட்டாக உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய நாட்டு மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகவே இது பார்க்கப்படுகிறது.