Categories
உலக செய்திகள்

நாட்டு மக்களை போருக்கு அழைக்கும் ரஷிய அதிபர்…. வெடித்து வரும் போராட்டங்கள்….!!!!

ரஷியாவில் 18 வயது முதல் 65  வயது வரை உள்ள ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷியா உக்ரைன்  மீது 6  மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை பல நாடுகளும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன்  படைகளிடம் இழந்தும் வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு  மேற்கு நாடுகள் வழங்கும் நவீன ஆயுதங்கள் தான் காரணம் என ரஷிய அதிபர் புதின் ஆவேசமாக பேசினார். மேலும் அவர் நேற்று முன்தினம் நான் உளறுகிறேன் என நினைக்காதீர்கள் உண்மையிலே அணுகுண்டு போடுவேன் என மேற்கு நாடுகளை எச்சரித்தார். இந்நிலையில் நாட்டில் உள்ள 3  லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களை படைக்கு திரும்பும்படி உத்தரவிட்டார். இதனால் உக்ரைனில்  பயங்கரமான போர் நடக்க வாய்ப்பு இருப்பதாக வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

மேலும் புதினின் இந்த உத்தரவை எதிர்த்து ரஷிய நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 1500- க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் பல்வேறு வேலைகளை செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் புதினின்  இந்த அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏராளமான முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயல்கின்றனர். எனவே ரஷிய அரசு 18 முதல் 65 வயது வரை யாரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என தடைவிதித்துள்ளது. மேலும் அவர்களுக்கு டிக்கெட் வழங்க கூடாது என்று விமான நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 1939-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போர் நடந்தது. அதில் ஜெர்மனியின் நாஜி  படைகளுக்கு எதிராக தனது நாட்டு மக்களை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி ரஷியா சேர்த்தது. அதேபோல் தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு வீரர்களை சேர்க்கிறது. இந்த சம்பவம் உலக நாடுகளுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |