Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டுக்கு புதிகட்டுப்பாடு… அறிக்கை வெளியிட்டு அமைச்சர்…!!

பொங்கலை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாட்டு மாடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிபுணர்களிடம் பதிவு ஒன்றை அளித்திருந்தார். அதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆரம்பநிலையில் கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திதோடு மட்டுமல்லாமல் இன்னுயிர்  உயிர் காப்போம் எந்த திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள 20 அரசு மருத்துவ மனைகளில் செயல்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சிறப்பான முறையில் நடத்தப்படவுள்ளதாகவும் . இதில் நாட்டு மாடுகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என அமைச்சர்  கூறியுள்ளார். மேலும்  கலந்து கொண்ட அமைச்சர் வீரபாண்டி கிராமத்தில் பயணிகள்  நிழற்குடை, இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |