Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாட்டு வெடிகுண்டை கடித்ததா….? காயங்களுடன் கிடந்த காட்டு யானை…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காயங்களுடன் விழுந்து கிடந்த காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முள்ளியங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் 10 வயதுடைய பெண் யானை காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவ குழுவினர் உதவியோடு அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, உணவு தேடி காட்டுயானை தோட்டத்திற்கு சென்றபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து நாக்கு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காயமடைந்த யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |