கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பாஜக தனித்து போட்டியிட முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் குமரிமாவட்டத்தில் உள்ள மலைகளில் கல்குவாரி என்கிற பெயரில் மலை மணல் எம் சாண்ட் நொறுக்கி கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். மக்களுக்கு அல்ல அதானி கட்டும் துறைமுகத்திற்கு செல்கிறது. கல் குவாரியை தனியாருக்கு கொடுக்கிற உரிமை அரசுக்குத்தான் உள்ளது. அரசுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது.
தொடர்ந்து போராடித்தான் தடுக்க முடியும். வேறு வழியில்லை. நாங்கள் போராடியதனால் பல இடங்களில் மணல் எடுப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். பல இடங்களில் மணல் எடுக்க கூடாது என்று போராடி இருக்கிறோம். கோட்பாட்டளவில் நாங்கள் திராவிட கட்சிகளுக்கு எதிராக நிற்கிறோம். திமுகவா? நாம் தமிழரா? என்று தான் சண்டை நடக்கிறது. அதிமுக சட்டசபையில் விவாதம் பண்றது இல்லை. அதிமுக, திமுக இரண்டும் ஒரே கட்சி ஆகிவிட்டது. பாஜக எங்கே இருக்கிறது? நாம் தமிழர் கட்சி சின்ன கட்சி. அதேபோன்று பாஜகவை தனித்து போட்டியிட சொல்லுங்கள். எத்தனை விழுக்காடு வாக்கு வாங்குகிறார்கள் என்று பார்க்கலாம். நாட்டையே ஆளும் பாஜக தனித்து போட்டியிட முடியுமா? வாருங்கள் வந்து நின்று பாருங்கள் என்று பேசியுள்ளார்.