உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட போன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றிய போதிலும், சில காம கொடுரர்களால் தொடர்ந்து இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் உத்திரப் பிரதேசம் மாநிலம் புதான் மாவட்டத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட போன 50 வயது பெண்ணை, கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அந்தரங்க உறுப்பை சிதைத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவ அறிக்கையில், பெண்ணின் உடலில் பல எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளது. நுரையீரல் குத்திக் கிழிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் பெண்ணின் உறவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.