தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் அவர்களின் 24 பேர் குழந்தைகளாகும். மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் போன்றவர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவேன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த கொடூர சம்பவத்தால் அமெரிக்க அதிர்ச்சி அடைந்துள்ளது இந்த சம்பவம் கடும் கண்டணத்துக்குரியது. மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் நீண்ட கால கூட்டாளியான தாய்லாந்துக்கு உதவுவதற்கு அனைத்து வகையிலும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம் என அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி 35 பேரை கொன்று குவித்தது மட்டுமல்லாமல் தனது மனைவி மகளையும் கொன்று தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது அவர் பன்யா காப்பர்(34) என்பவர் ஆவார். அவர் நா வாங் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இதன் பின்னணி பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.