Categories
தேசிய செய்திகள்

நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் எரிபொருள் தட்டுப்பாடு…. பல்வேறு சேவைகள் நிறுத்தம்….!!!!!!!

இலங்கையில் ஏற்பட்டு வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை நிறுத்த தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நிய செலவாணி, கையிருப்பு, பற்றாக்குறையும் அந்த நாட்டை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறது. அந்நிய செலவாணி இல்லாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய நிறுவனமாக சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்கள் பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு இல்லை. இதனால் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக டோக்கன் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பல்வேறு சேவைகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. அலுவலக ஊழியர்களையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வாரம்தோறும் மூன்று நாட்களுக்கு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அரபு நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல் ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசிய இலங்கை அதிபர் கோத்தபாய  ராஜபக்சே ரஷ்யாவில் இருந்து எண்ணெய்  இறக்குமதி செய்வது தொடர்பாக பேசி உள்ளார்.

இது ஒரு புறம் இருக்க 40 ஆயிரம் டன் வீதம் 4 தொகுப்பு எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை அரசு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. மேலும் சர்வதேச சந்தையில் பெரும் அளவில் மொத்தமாக எரிபொருள் இறக்குமதி செய்வதால் கவர்ச்சிகரமான தள்ளுபடியை  இந்தியா பெற்று வருகின்றது. இதே போல் தள்ளுபடி பெறுவதற்காக ரொக்கப்பணம் செலுத்தி இந்த பெட்ரோல் டீசல் வாங்க முடிவு செய்து இருக்கின்றது. இலங்கை வெளியுறவு மந்திரி ஜிஎல் பெய்ரீஸ்  தெரிவித்த இந்த யோசனையின்படி இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். எரிபொருள் இறக்குமதிக்காக  700 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்கனவே இந்தியாவிலும் கடன் வாங்கியுள்ள இலங்கை அரசு மேலும் 500 மில்லியன் டாலர் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த ரொக்க பரிவர்த்தனை மூலமாக எரிபொருள் வாங்குவதற்காக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |