8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை நோட்டமிட்டு உள்ளனர். அதனால் அவர்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி அந்த சிறுமி கடந்த வாரம் சனிக்கிழமை தனது பெற்றோருக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் கூட்டம் அந்த சிறுமியை தூக்கி சென்று அருகில் உள்ள காட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு அவர்களின் பெற்றோர்கள் தங்கள் அருகில் படுத்திருந்த பெண்ணை காணாததால் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
அப்போது அந்த சிறுமியின் உடல் அருகில் உள்ள கிணற்றில் கிடப்பதாக கூறிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையில் அவர் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.