ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் முன்பு பாஜகவினர் திரண்டு கைது செய்யப்பட்டதற்கு நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி உயிரிழந்த சிறுமியின் உடலை குடும்பத்தினரின் அனுமதியின்றி காவல் துறையினர் அவசர அவசரமாக எரித்தது பல விமர்சனங்களை எழ செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.
இதனால் கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவரது குடும்பத்தினர் உட்பட சுமார் 500 பேர் பாஜகவின் தலைவர் ராஜீவ் சிங் வீட்டின் முன்பு ஒன்று திரண்டனர். அங்கு வைத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் தவறு செய்யவில்லை. அவர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தை கூட்டிய நபர் ஒருவர் கூறியுள்ளார். சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு முன்பு பாஜகவினர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.