ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா(50) என்பவருடைய கணவரின் சகோதரி ஜெயம்மா(50). இவர்கள் இருவருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் மஞ்சுளாவும், ஜெயம்மாவும் மட்டும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மற்ற அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று மஞ்சுளாவுக்கும், ஜெயமாம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் கோபமடைந்த மஞ்சுளா வீட்டில் கிடந்த ஆயுதத்தை எடுத்து ஜெயம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த ஜெயம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் பயந்துபோன மஞ்சுளா மற்றொரு அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது ஜெயம்மாவை மஞ்சுளா கொலை செய்தது தெரிய வந்தது. ஆனால் எந்த காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது குறித்து தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.