இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே டி20 மேட்ச் நடைபெற்று வருகிறது. இந்த மேட்சின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியினர் 20 ஓவரில் 215 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தனர். இந்த மேட்சில் இந்திய வீரர்கள் ரவி பிஷ்னோய், ஹர்ஷேல் படேல் ஆகியோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பிறகு மீதமுள்ள 3 பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதில் உம்ரான் கான் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். இருப்பினும் 56 ரன்களை வாரி வழங்கினார். இவர் கடந்த வருட ஐபிஎல் தொடர்களில் ஒரு சில மேட்ச்களில் சிறப்பாக விளையாடியதால் டி20 மேட்சில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் கான் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி எதிரணிகளுக்கு மிகவும் டஃப் கொடுத்தார். இவர் 157.0 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி 22 வயதில் இளம் இந்திய பந்துவீச்சாளராக சரித்திர சாதனை படைத்தார். இதன் காரணமாக உம்ரான் கானை வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்ய வேண்டும் என ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்றோர் கேட்டுக்கொண்டனர். ஆனால் வேகமாக பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்கும் உம்ரான் கானை 3 வருடங்கள் ஆவதற்கு முன்பாக டி20 மேட்ச் தேர்வு செய்யக்கூடாது என கபில்தேவ் கூறியுள்ளார்.
இதேபோன்று தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன் லாலும் உம்ரான் கானை தேர்வு செய்திருக்கக் கூடாது என கூறியுள்ளார். அதாவது உம்ரான் கான் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தாலும், அவரை முதலில் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்ய வேண்டும். அந்த டெஸ்ட் போட்டிகளில் நன்கு விளையாடி தேர்ச்சி பெற்ற பிறகு டி20 மேட்சுக்கு எடுத்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் டி20 மேட்சில் கண்டிப்பாக அவரை தேர்வு செய்திருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.