நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தசரா. இத்திரைப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்க எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகின்றது.
இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதற்காக படக்குழு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கின்றது.