சேவியர் ஒன்றியம் பிரிந்தபோது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் வாடகை கார் ஓட்டியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
1991 ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத் ஒன்றியம் உட்பட 15 நாடுகளாக பிரிந்தது. அப்போது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்ய மக்கள் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின் இந்த பொருளாதார நெருக்கடி பலரை ஆட்டி படைத்ததாக அவர் கூறினார். அப்போது தனக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பால் வாழ்வாதாரத்தை இழந்த தான் வாடகை கார் ஓட்டியதாக கூறியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த பெரும் துயர சம்பவம் ரஷ்ய மக்கள் பலருக்கு கருப்பு தினமாகவே உள்ளதாக அவர் கூறினார். ரஷ்ய அதிபர் புதின் சோவியத் ஒன்றியத்தின் உளவு படையான கே.ஜி.பி யில் குறிப்பிடத்தக்கது.