வேளாண் சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து விலகுவதாக திரு .பூபேந்தர் சிங் மான் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம் இது குறித்த அறிக்கையை இரண்டு மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து விலகுவதாக பாரதிய கிசான் யூனியனின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பூபேந்திர சிங் மான் அறிவித்துள்ளார். தானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இக்குழுவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்