செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முடிந்தவுடனே லோக்கல் பாடி அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்ட்ராங்க் வாட்டர் டிரைனேஜ் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள். சென்னையில் 1,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த டிரைனேஜ் இருக்கிறது. ஆனால் 400 கிலோ மீட்டரில் இருந்து 600 கிலோமீட்டர் வரை தான் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் விமர்சிக்கின்றோம்.
அதேபோல முன் ஜாக்கிரதை ஒரு செக்ஷன் மோட்டார் வச்சி உடனடியாக அந்தத் தண்ணீரை இழுத்து உறிஞ்சி வேறு பகுதிக்கு அனுப்புகின்ற வேலையை செய்யாமல் மெத்தனமாக இருந்தார்கள். அதில் அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் நம்முடைய முக்கியமான நோக்கம். அதை மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகம் வேறு வேறு காரணங்கள் கூறி கொண்டு இருக்கிறார்கள். இது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
நானும் ஜெய்பீம் படத்தை பார்த்தேன். அது அற்புதமான ஒரு படம். அதை அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் . தவறு கிடையாது. இது மாதிரி படங்களை எல்லாம் பார்க்க வேண்டும். அதே சமயத்தில் நம் மதிப்பு மிக்க ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள் குறிப்பாக அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள அறிக்கையில் பார்க்கும் போது அதில் சில தவறுகள் இருந்தது. அந்தக் காலண்டர் படங்களையெல்லாம் மாற்றம் செய்துள்ளார்கள். அதேபோன்று ஹிஸ்டாரிகல் டெபிக்சன் இதுபோன்று ஒரு சரித்திரத்தை டெபிக்சன் செய்யும்போது நீதியரசர் சந்துரு ஐயா அவர்களுடைய வாழ்க்கையை டெபிட் செய்துள்ளார்கள்.
இந்தப்படத்தில் சில இடத்தில் பெயர்கள் சமுதாயத்தை மாற்றி இருக்கலாம். சிறப்பான படம் இன்னும் கொஞ்சம் பெட்டராக சரித்திர நிகழ்வுகளை சரியான பெயர்களை சூட்டி, எந்த ஒரு சமுதாயத்தையும் கூட காயப்படுத்தாமல் அந்த மெசேஜை சொல்லியிருக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனாலும் அது பார்க்க வேண்டிய ஒரு படம் என்று கூரியுள்ளார்.