டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 தேதி தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு நடுவே வர்ணனையின் போது வீடியோ கால் வழியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் “தென் இந்திய கலாச்சாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசில் அடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக் கொண்டீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா “நானும் பிராமணன்தான்”. 2004ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் விளையாடி வருகிறேன். அந்த கலாசாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ரெய்னாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது ஜடேஜா தனது ட்விட்டரில் #rajputboy என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி பதிவிட்டால் ட்விட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தன்னுடைய ஜாதி பெருமையை இவர்கள் பேசுகின்றனர் என்று சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு முன் இவர் இப்படி பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.