Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நானும் ரவுடி தான்”…. வலைதளத்தில் வைரலான வீடியோ…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை மேல் தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி பழைய பேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே வைத்து நண்பர்களுடன் இணைந்து வினோத்குமார் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே அசோக் தனது சமூக வலைதள பக்கத்தில் நானும் ரவுடிதான் என மாஸ் காட்டுவது, புகைப்பிடிப்பது, போலீசாரை மிரட்டுவது உள்ளிட்ட வீடியோக்களுடன் அரசு பேருந்தை தீ வைத்து கொளுத்துவேன் எனவும் மிரட்டி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரின் உத்தரவின்படி தலைமறைவாக இருந்த அசோக்கை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Categories

Tech |