கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமிலா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகவும், அவரது மனைவி கமலா ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கமிலா ஆடையுடன் இணைந்திருக்கும் விலை உயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி டீம் ஜிபி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு சார்லஸ் மற்றும் கமிலா விருந்தளித்தனர். அப்போது நிகழ்ச்சியில் வெல்வெட் நீல உடை மற்றும் ஆடையுடன் இணைக்க பயன்படும் சிறிய வைர அணிகலனை அணிந்து வந்த கமிலா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இது உடை ஊசியாகும். இந்நிலையில் அவர் அணிந்திருந்த அணிகலனின் மதிப்பு E13,000 ரூபாயாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் ஸ்டீவன் ஜோன் கூறியதாவது. சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட கமிலாவின் அணிகலன் குறியீடு கொண்டுள்ளதாகவே நினைக்கிறேன்.
மேலும் மகாராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு அவர் அணிந்த முதல் அணிகலன் இதுவாகும். அதாவது நான் ராணி மற்றும் தன்னுடைய புதிய அரச பாத்திரத்திற்கான தனது அர்ப்பணிப்பை காட்ட அவர் இதை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் இது போன்ற உடையுடன் இருக்கும் சிறிய அணிகலனை தான் மறைந்த ராணி விரும்பி அணிவார் என்பது குறிப்பிடத்தக்கது.