கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு உடை அணிந்து வந்து வாக்களித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 52 நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலும் மற்றொருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் மருதம் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா பாதுகாப்பு உடை அணிவித்து மாநகராட்சி வண்டியில் மருத்துவ குழு மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்துள்ளனர்.